Life affair near Namakkal: Farmer shot dead by firearm: 3 people sentenced to life

காதல் விவகாரத்தில் விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே தின்னனூர் நாடு கோனையத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(55). விவசாயி. இவரது தங்கை மகளான ராதாவை ஜெயராஜ் மகன் ஜெயபால் 2011இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதை விரும்பாத ராதாவின் சகோதரர்கள் வெங்கடாசலம்(37), நாகராஜ்(30)ஆகிய இருவரும் அடிக்கடி ஜெயராஜ், அவரது மகன் ஜெயபாலிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த ஜெயராஜூடம் ராதாவின் சகோதரர்கள் வெங்கடாசலம்(37), நாகராஜ்(30) மற்றும் உறவினர் மணிகண்டன்(37) ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது இவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஜெயராஜை சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன்,வெங்கடாசலம், நாகராஜ் ஆகிய 3 பேரையும் வாழவந்திநாடு போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கானது நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!