life imprisonment for young people
Namakkal court order : Kill the anthropomorphic jewelry and money
Robbery
மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், அவரது நண்பருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நாமக்கல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராயர்பாளையம் நெடுங்காட்டைச் சேர்ந்தவர் சுப்பு கவுண்டர் மனைவி பாவாயி.
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கட்டிலில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இச்சம்பவம்குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராசிபுரம் அருகே தொப்பபட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் மணிகண்டன் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பாவாயி வைத்திருந்த ரூ.2,500 பணம், அரை பவுன் நகைக்காக இருவரும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோ முன்னிலையில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.4,000 அபராதம், தினேஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பில்
வக்கீல்சுசிலா ஆஜரானார்.