Lightning strike near Perambalur; Shepherd worker killed!
பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமச்சந்திரன் (வயது 55), இன்று மாலை பேரளி அருகே உள்ள ஓடையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் மின்னலுடன் கூடிய மழை பெய்தது, இதில் மின்னல் தாக்கியதில் அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ விரைந்து சென்று, ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.