Like villages in all wards of Perambalur Municipality. request to set up a R.O. water plant!
மனித சமூகத்திற்கு, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மிக மிக அத்தியாவசியமானவைகள் ஆகும். ஆனால், காற்றுக்கு அடுத்தப்படியாக தண்ணீரே பிரதானம். தாயை பழித்தால் கூட தண்ணீரை பழிக்காதே என்பது பழமொழி!
மனித நலனின் சுகாதாரத்தை நிர்ணயம் செய்வதில், குடிநீரே முக்கிய வகிக்கிறது. அந்த குடிநீரை அரசியல்சானசப்படி இலவசமாக நாட்டின் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமை. ஆனால், காலச்சூழ்நிலை மாற்றத்தால், நிலத்தடி நீர், மாசுப்பட்டு வருகிறது. இயற்கையிலேயே மனிதனுக்கு கிடைக்க வேண்டிய தாது சத்துகள் தண்ணீரில் இருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் போன்று வறட்சி மாவட்டங்களில் தண்ணீர் தேவை மிக அதிகம். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வினியோம் தற்போது இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் ஆ.ராசா போன்றவர்கள் காவேரி – கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் குழாய்கள் வழியாக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால், அந்த தண்ணீரை மக்கள் தூய்மை குறைபாடு காரணமாக பருகாமல் மாற்று உபயோகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். குடிக்கு ஆர்.ஓ அல்லது மினரல் வாட்டர் எனப்படும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை ரூ. 10 முதல் 35 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், இது ஏழை எளிய மக்களுக்கு விலைவாசி ஏற்றத்தால், கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. அதனால், கிராமப் புறங்களில், ஆர். ஓ வாட்டரை ரூ. 5க்கு (20 லி) வழங்கு போல பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளிலும், வெளியூரில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வேலை பார்க்க வருபவர்களுக்காக புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, காமராஜர் வளைவு, சங்கு, ரோவர் ஆர்ச், 4 4 ரோடு, 3 ரோடு, கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் 21 வார்டு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால், குறைந்த செலவில் மக்களுக்கு உரிய குடிநீர் கிடைக்கும் என நம்புகின்றனர்.