
Liquor sale for the New Year in Namakkal district Rs 6 crore; Rs 40 lakh less than last year
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி மற்றும் 1ம் ஆகிய 2 நாட்கள் மதுபானம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த 2 நாட்களில் ரூ.5 கோடியே 99 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் தினசரி சுமார் ரூ.2 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால் கடந்த 31-ந் தேதி 5,048 பெட்டிகள் மதுபானம், 3,537 பெட்டிகள் பீர் வகைகள் விற்பனையானது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சம் ஆகும்.
இதேபோல் ஜன.1ம் தேதி 4,149 பெட்டிகள் மதுபானம், 2,535 பெட்டிகள் பீர் வகைகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 66 லட்சம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர். 2 நாட்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடியே 99 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 39 லட்சத்துக்கு மதுபான வகைகள் விற்பனைனது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ரூ.40 லட்சம் குறைவாக மது விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.