Literacy Assessment Test: Perambalur Collector Exam!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 – 27” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 273 கற்போர் மையங்களில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,420 கற்போர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாரணமங்களம் ஊராட்சி, நல்லேரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி முடிவுற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!