Literary competitions, educational tours for students in the art of winning, perambalur dt level

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பயிலும் 6,7,8 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளிடையே பள்ளி சுகாதாரம் மற்றும் கழிவறை சுத்தமாகவும், சுகாதாரமாவும் பயன்படுத்துதல், பாதுகாத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் வினாடி வினா, மன்ற செயல்பாடுகள், நூலகம் மற்றும் திரைப்பட செயல்பாடுகள் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது.

பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்வு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வேப்பந்தட்டை ஒன்றிய மாணவ, மாணவிகள் தஞ்சாவூருக்கும், ஆலத்தூர் ஒன்றிய மாணவ, மாணவிகள் புதுக்கோட்டைக்கும்,

பெரம்பலூர் ஒன்றிய மாணவ, மாணவிகள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கும், வேப்பூர் ஒன்றிய மாணவ, மாணவிகள் திருச்சிக்கும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் நான்கு ஒன்றியங்களிலிருந்தும் 192 மாணவ, மாணவிகளுடன் 20 ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலா சென்றுள்னர்.

மாவட்ட கல்வி அலுவலர் (பொ) செந்தமிழ்செல்வி போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகள் செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வின்போது அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!