Load Auto – Two Wheeler collision near Perambalur; One killed – 2 injured
பெரம்பலூர் அருகே உள்ள புதுநலுவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மகன் முத்துக்குமார் (வயது 22), வேலூரைச் சேர்ந்த செல்லமுத்து மகன் அஜித்குமார் (வயது 23). இருவரும், ஏசி மெக்கானிக்காக உள்ளனர். இன்று மதியம் குன்னத்திலிருந்து பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சித்தளி பிரிவு அருகே சென்றபோது, வேப்பூரில் இருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்ற லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.
இதில், முத்துக்குமார், அஜித்குமார் மற்றும் ஆட்டோ டிரைவர் முருக்கன்குடியைச் சேர்ந்த மருதை மகன் சுரேஷ்குமார் (27) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்த தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று, காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல், அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.