Loan of Rs.12.36 crore on behalf of banks: Perambalur Collector issued.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கி கூட்டமைப்புகளின் சார்பாக 294 பயனாளிகளுக்கு ரூ.12.36 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 23 பயனாளிகளுக்கும், கனரா வங்கி மூலம் 10 பயனாளிகளுக்கும், பேங்க் ஆப் இந்தியா மூலம் 3 பயனாளிகளுக்கும், பேங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆப் மகராஷ்டிரா மூலம் தலா 2 பயனாளிகளுக்கும், இந்தியன் வங்கி மூலம் 1 பயனாளிக்கும், மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் துறை வங்கிகள் மூலம் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் மொத்தம் 294 பேருக்கு ரூ.12.36 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது. பின்னர், கலெக்டர் பேசியதாவது:
“தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் கடனுதவிகள் மானியத்துடன் வழங்கி வருகிறது. சாமானிய மனிதனும் தொழில் தொடங்கி, தமிழகத்தின் உற்பத்தியினை பெருக்குவதற்காக வங்கி அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி, அரசின் சார்பில் வழங்கி வரும் மானிய திட்டங்களை அவர்களுக்கு முழுமையாக சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நிதியாண்டில் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கடனுதவிகளை பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் வழங்க முன்வரவேண்டும்.” என பேசினார்.
இந்நிகழ்வில் வங்கி மேலாளர்கள், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், , தாட்கோ உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.