Loan to start a business with 35% subsidy at Perambalur District Business Center!

குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமமந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP),கீழ் மானியமாக 15% முதல் 35% வரை மானியத்துடன் கூடிய உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலும், பெரம்பலூர் மாவட்ட தொழில்மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் ஆர்வமுள்ள பயனாளிகளிடமிருந்து http://www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர்களாகிறார்கள். உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்ச ரூபாய்க்கு மேல் திட்டமதிப்பீடு உள்ள தொழில்களுக்கும் மானிய உதவி வழங்கப்படுகின்றது. இத்திட்டம் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும், கிராமப் பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் மற்றும் கயிறு வாரியம் வாயிலாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு நிதி ஆண்டுக்கான (2021-2022)-ல் பெரம்பலூர் மாவட்ட தொழில்மையத்திற்கு மானியமாக வழங்க இலக்கீடாக 45 நபர்களுக்கு ரூ.130.00 இலட்சம் மானியம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் செப்டம்பர் 2021 வரை 11 பயனாளிகளுக்கு ரூ.29.65 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், ஆர்வமுள்ள இம்மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் http://www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை, நேரிலோ, 04328 – 224595, 04328 – 225580 என்ற தொலைபேசி எண்களிலோ அணுகலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!