Loan with subsidy to construct aqueduct under irrigation loan scheme; Perambalur Collector Notice
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுதுள்ள அறிவிப்புடு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின், கடன் திட்டத்தினை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
மேற்படி திட்டங்கள் மூலம் கடன் உதவி பெற சாதி, இருப்பிடம், மற்றும் வருமான சான்றிதழ்கள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சிறுகுறு விவசாயி சான்று, விண்ணப்பதாரரின் நில உடைமைக்கு ஆதாரமான கணினிவழி பட்டா மற்றும் அடங்கல் நகல் ஆகியவற்றின் சான்றுகளை சமர்ப்பித்து விண்ணப்பிக்கவேண்டும்.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த தகுதியுடைய விவசாயிகள் மேற்படி கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.