Local cable operators, the upcoming monthly subscription of May 15. Notice to pay within || உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள், நிலுவையில் உள்ள சந்தா தொகையினை மே.15. க்குள் செலுத்த அறிவிப்பு

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், பொது மக்களுக்கு உயரிய தரத்தில் குறைவான கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கும் நோக்கத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அங்கீகரித்து ஒளிபரப்பிற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சந்தா தொகையினை வசூலித்து அரசு கணக்கில் செலுத்த வேண்டியது உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டரின் கடமையாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வட்டங்களிலும் உள்ள 237 உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களில், ஒருசிலரை தவிர இதர கேபிள் ஆப்பரேட்டர்கள் மாதாந்திர சந்தா தொகையினை செலுத்தாமல் அதிக அளவில் நிலுவை வைத்துள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டா;கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ. 58 லட்சத்து 65 ஆயிரத்து 202- நிலுவை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. நிலுவை தொகை மற்றும் மாதாந்திர சந்தா தொகையினை செலுத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தியும் கேபிள் ஆப்பரேட்டர்கள் தொகையை செலுத்தாமல் உள்ளனர்.

எனவே, உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நிலுவையில் உள்ள சந்தா தொகையில் 75 சதவீதத்தை 30.04.2017-க்குள்ளும் மீதமுள்ள தொகையை 15.05.2017-க்குள்ளும் செலுத்த வேண்டும். இந்த காலகெடுவுக்குள் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை மற்றும் மாதாந்திர சந்தா தொகை செலுத்தாதவர்களின் கேபிள் தொடர்பான பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சந்தா நிலுவை தொகையினை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும், என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!