locked house in the perambalur city of 15 pounds of jewelry, including the theft of Rs .2.60: police enquiry
பெரம்பலூர் நகரில் பூட்டிய வீட்டில் 15 பவுன் தங்க நகை, 2.60 லட்சம் ரொக்கம் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன செம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் நகராட்சி, வடக்குமாதவி சாலை, 4வது வார்டு ராயல் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசிப்பவர் அக்பர் பாஷா(58). தள்ளுவண்டி கள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூரில் தனது உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அக்பர்பாஷா குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
அக்பர்பாஷாவின் மகன் இப்ராஹீம் மட்டும் வீட்டில் இருந்தார். இதனிடையே நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற இப்ராஹீம் நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டினுள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு, இதில் வைத்திருந்த 15 தங்க பவுன் நகை, 2.60 லட்சம் ரொக்கம் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்ததுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராஹீம் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் ஆகியவற்றுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளை போன வீட்டருகே உள்ள சி.சி.டிவி., கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட பொது மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.