Lok Adalat in Perambalur Court: 156 cases settled

பெரம்பலூர் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மாவட்ட தலைமை நீதிபதி சுபாதேவி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. நிரந்தர மக்கள் கோர்ட் நீதிபதி கருணாநிதி, குடும்ப நல கோர்ட் நீதிபதி தனசேகரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சப்-கோர்ட் நீதிபதி ஷகிலா, மாவட்ட உரிமையியல் கோர்ட் நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் கோர்ட் மாஜிஸ்திரேட்டுக்கள் கருப்பசாமி, செந்தில்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாணை நடத்தினர்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிவில், ஜீவனாம்சம், மணவாழக்கை சம்மந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வாகன விபத்து வழக்குகள் என 700 வழக்குகள் விசாரணை எடுக்கப்பட்டது. இதில் 3 கோடியே, 79 லட்சத்து 89 ஆயிரத்து 753 ரூபாய் மதிப்பிலான 156 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 337 பயனாளிகள் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!