Long Distance Running Competitions: Perambalur Collector Information.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் 07.10.2023 அன்று காலை 7.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தொடங்கி நடத்தப்பட உள்ளது என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், அதில் தெரிவித்துள்ளதாவது:

போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூர ஓட்டப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் வயது சான்றிதழ், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவராக இருந்தால் படிப்பதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். ஆகவே போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவர்களது வங்கிக்கணக்கின் விவரம் அடங்கிய புத்தக தெளிவான செராக்ஸ் நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

போட்டிகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் 06.10.2023 அன்று மாலை 6.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயரினை , வயது சான்றிதழ், மருத்துவரின் தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகலுடன் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று( Fitness Certificate from Registered Medical practitioner) பெற்று வருதல் வேண்டும் , மருத்துவ முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்பு படிவத்தில் எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ மற்றும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ போட்டியாளர்களே பொறுப்பு. போட்டிகளில் தவறான விதிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பாரபட்சமும் இன்றி போட்டிகளில் இருந்து விலக்கப்படுவர்.

போட்டிகள் நடைபெறும்போதும் தானாக முன்வந்து போட்டியில் இருந்து விலக நினைக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் அருகில் உள்ள சோதனைச்சாவடிக்கு சென்று அமைப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

போட்டிகளில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதமும்

நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுப்வர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே காசோலையாக வழங்கப்படும். நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ள தடங்கள் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!