Lorry’s indefinite strike from July 20 on behalf of AMTC: Support State Larry Owners Federation
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர்குமாராசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும். சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 20 ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் புதுதில்லியில் அறிவித்துள்ளது.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை 20 ம் தேதி துவங்கும் காலவரையற்ற போராட்டத்தில் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம். அகில இந்திய மோடடார் காங்கிரஸ் கோரியுள்ள இந்த 3 மூன்று பிரதான கோரிக்களை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.