Loss in online trading: Chemistry teacher who burned to death the Maths teacher who asked for money, jailed!

பெரம்பலூர் அருகே சக ஆசிரியர்களிடம், பணத்தை வாங்கி, ஆன் லைன் டிரேடிங் முதலீடு செய்த கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம், கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட கணக்கு டீச்சர் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, தலைமறைவாக சுமார் 3 மாதம் போக்குகாட்டி வந்த ஆசிரியர் வெங்கடேசனை போலீசார் கைது செய்து இன்று காலை சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன் (38). இவர் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட வி.களத்தூரில் கெமிஸ்ட்ரி ஆசிரியராக பணிசெய்து வந்தார். அதே பள்ளியில், வேப்பந்தட்டை சேர்ந்த பாலமுருகனை மாற்று சாதியில் இருந்து காதல் திருமணம் செய்து கொண்டவர் தீபா (42). இவரும் அதே பள்ளியில் கணக்கு டீச்சராக வேலை பார்த்து வந்ததார். ஒரே பள்ளியில் பணியாற்றுவதால், நட்பாக பழகிய வெங்கடேசன் – தீபா இருவரும் நெருங்கிய தோழமைகள் ஆனார்கள்.

இந்நிலையில், அதிக சம்பாதிக்கும் ஆசையில் வெங்கடேசன் சக ஆசிரியர் ஒருவர் மூலம் ஆன் லைன் வர்த்தகத்தை கற்றுக் கொண்டார். அதில் அதிக பணத்தை இழந்ததால், அதை மீட்க தீபா உள்ளிட்ட சக ஆசிரியர்களிடம் லட்சக்கணக்ககில் பணம் வாங்கி மீண்டும் முதலீடு செய்ததில் வர்த்தகம் தோல்வியை தழுவியது. இந்த ஏமாற்றம் வெங்கடேசனை கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது.

, திருச்சியில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்து தான் ஏமாந்ததால், தனக்கு ஏமாற்றம் அளிக்க காரணமாக இருந்த நபரை கொலை செய்ய திட்ட ஆசிரியர் கத்தி மற்றும் சுத்தியலுடன் சில நாட்கள் அலைந்த வண்ணம் இருந்துள்ளார். இந்நிலையில் டீச்சர் தீபா தான் கொடுத்த சுமார் ரூ.20 லட்சம் பணத்தை கேட்டு நச்சரித்துள்ளார். வெங்கடேசன் பல பதில்களை சொல்லியும், திருப்தி அடையாத தீபா பள்ளியிலேயே மாணவர்கள் முன்னிலையில் வெங்கடேசன் கொண்டு வந்து கொடுத்த சுமார் 50 ஆயிரத்தை முககத்தில் வீசி எறிந்துள்ளார்.

அவமானம் அடைந்த வெங்கடேசன், பொறுமையாக இருந்துள்ளார். மேலும் தீபா தொடர்ந்து வெங்கடேசனை பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தும், அதற்கு பல பதில்களை வெங்கடேசன் தெரிவித்தும் சமாதானம் ஆகாமல், சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வெறுத்துப் போன வெங்கடேசன் சமானதம் செய்ய முருக்கன்குடி வனப்பகுதிக்கு தீபாவை அவரது காரிலேயே அழைத்து சென்று பேசி பார்த்துள்ளார். தீபா தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் கையில் சுத்தியால் தீபாவை தாக்கி நிலை குலைய செய்துள்ளார். தீபா துடி துடிக்க உயிருக்கு போராடி கொண்டு இருந்தாகவும், மீண்டும் அவரை தாக்கி உயிரை போக்கி உள்ளார். பின்னர், தீபாவின் காரிலேயே டிக்கியில் அவரது உடலை கிடத்தி பெரம்பலூர் நான்கு ரோட்டிற்கு வந்துள்ளான். காரை பிணத்துடன் நிறுத்தி விட்டு வந்து, பெரம்பலூர் டவுனிற்கு ஆட்டோவில் வந்து, கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு சென்றுள்ளார். தீபாவின் உடலை புதுக்கோட்டை அருகே உள்ள நமுணமங்கலம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எறித்துள்ளான். தீபாவின் நகைகள சுமார் 25 பவுனையும் கையில் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி கோயம்புத்தூர் சென்று காரை விட்டு விட்டு தலைமறைவானன்.

தீபாவின் வீட்டிலும், வெங்கடேசன் வீடுகளில் பணிக்கு போனவர்கள் வீடு திரும்பவில்லை என நவம்பர் மாதம் 15 ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். இதற்கிடையில் மனைவியை தேடி தீபாவின் கணவர் பாலமுருகன் பல சுங்கசாவடிகளில் கார் கடந்த நேரத்தை வைத்து, அவனது நடமாட்டத்தை கண்காணித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கு சிசிடிவி கேமராவும், செல்போன் சிக்கனலும் கை கொடுக்காததால் போலீசாருக்கு இந்த சவாலாக மாறியது. கோவையில் தீபாவின் கார் கேட்பாற்று நின்றதை காரின் எண்ணை வைத்து பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை சென்ற போலீசார் காரில் இருந்த ரத்தக் கறை படிந்த சுத்தியல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும், தாலியை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், தொடர்ந்து ஆசிரியர் வெங்கடேசன் தனது பெயரில் செல்போன் வாங்காமல், வேறு ஒருவரின பெயிரில் இருந்த செல்போனை அதிக பணத்திற்கு வாங்கி உலக நடப்புகளை தெரிந்து வந்துள்ளான்.

அதிகமாக ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் தங்காமல், அன்னதானத்திலும், ரோட்டோரம், மற்றும் பாலங்களுக்கு அடியிலும் படுத்து உறங்கி வந்துள்ளான். மேலும், கையில் இருந்த பணத்தை வைத்து கொண்டு தேனி, திருத்தணி உள்ளிட்ட பல ஊர்களில் சுற்றி, பின்னர், சென்னை மெரினா பீச்சில் மக்களோடு மக்ககளாக படுத்து உறங்கி வந்துள்ளான்.விசாரணைக்கு சென்ற போலீசார் பல ஊர்களில் பிச்சைக்காரர்கள் வெங்கடேசனுடன் சண்டையிட்டதை சிசிடிவி கேமராவில் பதிவானதை பார்த்துள்ளனர். வெங்கடேசன் தான் என உறுதி செய்துள்ளனர்.

இறுதிளாக மக்களோடு மக்களாக சென்னை மெரினா பீச்சில் இருப்பதை அறிந்த போலீசார் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், தீபாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தன் பேரில், இன்று காலை 26 பவுன் தங்க நகைகளையும் கைப்பற்றிய வி.களத்தூர் போலீசார் 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து வேப்பந்தட்டை யில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் முன் ஆஜர் படுத்தினர்.

வழக்கு பதிவு தொடர்பான விவரங்களை விசாரித்த நீதிபதி வரும் மார்ச்.23 வரை வெங்கடேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வெங்கடேசனை பெரம்பலூர் மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையிர் அடைத்தனர்.

அழகான வாழ்க்கையை தொலைத்த ஆசிரியர்கள்:

அதிக பண ஆசையால், இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நட்டம் அடைந்ததோடு, நம்பி கொடுத்தவர்களின் கடனை திரும்ப கொடுக்க முடியாமலும், குழந்தைகளை விட்டுவிட்டு வெங்கடேசன் சிறைக்கு சென்றுவிட்டார்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போலவும், கடன் அன்பை மட்டுல்ல உயிரை முறிக்கும் என்பதை டீச்சர் தீபா கொடுக்கல் வாங்கல் விவகாரம் உணர்த்தி உள்ளது. பெண் சுதந்திரம் என்பது அது ஓர் எல்லைதான் அதை மீறிய தீபாவின் 2 குழந்தைகளும் தாய் பாசம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பேராசை பெரு நஷ்டத்தோடு விடாமல் வாழ்வையும் கவ்வி சென்றது. வெங்கடேசனை நம்பி முதலீடு பல ஆசிரியர்கள் கொடுத்த பணத்தை நினைத்து உள்ளதும் போச்சே என கவலை அடைந்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!