Love affair near Perambalur: Attempted bombing of tappers: Young man arrested!
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தை ராஜ் மகன் சேர்ந்த தனபால் (24). பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு பைக் மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
தனபால் அதே கிராமத்தை 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்தோடு கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக பெண்ணின் தந்தை இளைஞனின் பெரியப்பா செல்வத்திடம் கூறி ஒரு வாரத்திற்கு முன்பு தனபாலை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தனபால் 5.45 மணியளவில் மாணவியின் வீட்டருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவதுமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் தந்தை, தனபாலை குச்சியால் அடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு மாணவியின் தந்தை, அவரது அண்ணன் இருவரும் தனபால் வீட்டிற்கு சென்று கேட்டபோது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச சென்றுள்ளான், அதனை தனபால் தம்பி நந்தக்குமார் (19)என்பவர் தடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனபாலை கைது செய்து அவரிடமிருந்து 23 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.