Lovers take shelter at Perambalur Police Station!

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், மங்களூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரமேஷ்-விஜி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமச்சிவாயம் (24).
10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்பதியாக வேலை செய்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசித்து வந்த மருதைமுத்து-ராதா தம்பதியினரின் மகள் அனிதா (23). B.E.,ECE படித்துள்ளார். அனிதாவைகடந்த 5 வருடமாக நமச்சிவாயம் காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே நமச்சிவாயத்தின் ஒரு தலைக் காதல் அனிதாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததால், அனிதாவும் நமச்சிவாயத்தை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் நமச்சிவாயமும், அனிதாவும் வீட்டை விட்டு வெளியேறி இன்று காலை 7 மணியளவில், பொதுமக்கள் உதவியுடன் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ கரடி முனியப்பன் கோவிலில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கணவன்-மனைவியான நமச்சிவாயம்-அனிதாவின் பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்களிடமிருந்து தங்களது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமென பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் நமச்சிவாயம்-அனிதா தம்பதியினரின் பெற்றோரை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்து சமசரம் பேச உள்ளனர்.

Advt: https://dsmatrimony.net/

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!