Low interest loan assistance for SC, ST category to set up Petrol Bank; Perambalur Collector Information!

பாரத் பெட்ரோல் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumbdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்/ பெண் அனைவரும் 27.09.2023 –க்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் / டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.

பாரத் பெட்ரோல் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த ஆண்/ பெண் இருபாலரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!