Cows suffering from non-drug disease (Lumpy Skin Diseases) in Perambalur district! Medical camps from tomorrow !!

பெரம்பலூர் மாவட்டத்தில், கறவை மாடுகள், கன்றுக் குட்டிகளுக்கு பரலாக மாட்டு அம்மை (லம்பி) என்ற நோய் பரவி வேகமாக வருகிறது. இந்நோயால், மாடுகளுக்கு உடலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது போல் கிருமிகளால் புண்கள் உண்டாகிறது. மாடுகளுக்கு மட்டும் இந்த நோய் ஈ மூலம் பரவும். ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்தடுத்த நாடுகளால் பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இதற்கு உலக அளவில் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு ஒரே தீர்வு மாடுகளையும், பட்டிகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுதான் என கால்நடை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில், எசனை வேப்பந்தட்டை, அனுக்கூர், பாலையூர், தொண்டப்பாடி என நூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் உழவர்கள் உபரித் தொழிலாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவற்றில் உழவு மாடுகள், கறவை மாடுகள், கன்றுக் குட்டிகள் என சுமார் ஒரு லட்சம் மாடுகள் இந்நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிபட்டு வருகின்றன. அதோடு மாடு வளர்ப்போர்களும் மாட்டம்மைக்கு உரிய மருந்து இல்லாததால், வேப்ப எண்ணெய், மற்றும் வேப்பிலை மஞ்சள், அரைத்தும் பூசுவதோடு புண்களை ஆற்றுவதற்காக கால்நடை மருத்துவர்களின் வழிகாட்டல்களில் சிகிச்சையும் கொடுத்தும் வருகின்றனர். ஆனால், கிருமிகள் தான் அழிந்தப்பாடலில்லை. இந்நோய் மனிதன் மற்றும் ஆடு, நாய், பூனைகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளுக்கு பராவாது கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாடுகள் நோயில் சிக்கித் தவிப்பதால் கால்நடை வளர்ப்போர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

முதற்கட்டமாக நாளை, வேப்பந்தட்டை, அனுக்கூர், பாலையூர், எசனை ஆகிய ஊர்களிலும், அடுத்த நாட்களிலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரிசோதனை மற்றும் புண் காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கு, போர்க்கால அடிப்படையில், தீவிர வைத்தியம் மாடுகளுக்கு செய்யப்பட்டு வருகிறது என்றும், அதனால், கால்நடை வளர்ப்போர்கள், பயப்பட தேவையில்லை என்றும், நோய் தாக்கிய மாட்டின் பாலை அருந்துவதால் எவ்வித பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த நோய் குறித்து துண்டு பிரசுங்கள் மூலம், வைத்தியங்கள், நாட்டு மருந்து குறித்தும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!