Maize, Paddy, Small Onions, Cotton, PM’s Crop Insurance Scheme: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், நெல், சின்ன வெங்காயம், மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு 31.10.2021 தேதி\க்குள்ளும் சின்னவெங்காயத்திற்கு 30.11.2021 தேதிக்குள்ளும் நெற்பயிருக்கு 15.11.2021 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்காச் சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296/-, பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.560/, சின்னவெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.1976/- மற்றும் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.537/- காப்பீடு செய்வதற்கான பிரிமியம் தொகை ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரிமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.