பெரம்பலூர் : பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் குரும்பலூர் பேரூராட்சியில் இன்று வாக்கு சேகரித்தார்.

இன்று காலை குரும்பலூர் பாளையத்தில் வாக்கு சேகரிப்பை கட்சியினருடன் துவங்கிய அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, கே.புதூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

குடிநீர் திட்டத்தின் கீழ் 4 குடிநீர் கிணறுகள் ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, குரும்பலூர் பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பில் பெண்கள் சுகாதார வளாகமும், பாளையம் – குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, கே.புதூர் பகுதியில் தார் சாலை அமைக்க 8.60 லட்சம் மதிப்பிலும், பாளையம் – ரெங்கநாதபுரத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பில், தார் சாலை, குரும்பலூர் -கே.புதூர் மற்றும், குரும்பலூர் – திருப்பெயர் கிராமத்திற்கு தார் சாலைகள் அமைக்க 2.40 லட்சம் மதிப்பிலும், ரூ. 20 லட்சம் மதிப்பில் 25 லாட்டர் டேங்குகளும், குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரிக்கு ரூ.2கோடி மதிப்பில் பணிகளும், குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரிக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், பேருராட்சி பூங்கா அமைக்க 60 லட்சமும் முதலமைச்சர் அம்மா உதவியுடன் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும்,

பாளையம் கிராமத்திற்கு பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீக்கவும், சமுதாயக் கூடம் அமைக்கவும், சாலைகளை சீரமைப்பது, குரும்பலூர் – சென்னைக்கு பேருந்து வசதி, குரும்பலூரில் காவல் நிலையம் அமைத்து கொடுக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க, அதிமுக சார்பில் போட்டியிடும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டார்.

அபபோத குரும்பலூர் பேரூர் கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!