Makkal Nala Poratta Kulu, demonstration in Perambalur about condemns to Sathankulan police; for Father-son murder!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் (வயது 55) அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31) ஆகியோர் பொதுமுடக்க விதிகளை மீறி கடைதிறந்ததாக கூறி சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்து காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பெரம்பலூரில் மக்கள் நலப்போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவறிழைத்த சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு 302 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யவேண்டும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடிரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீணடாமை ஒழிப்பு முண்ணனி நிர்வாகி வழக்கறிஞர். ப.காமராஜ், கலைஇலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் காப்பியன், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், திராவிடர் கழக நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், சின்னசாமி, வி.தொச. மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், ஆட்டோ சங்கம் சி.சண்முகம், ரெங்கநாதன், எஸ்.கே.சரவணன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.கருணாநிதி, ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி, செல்லம், ஜெயலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், முடிவில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் நன்றி தெரிவித்தார்.