Makkalai Thedi Maruthuvam Programme has benefited 13,774 people; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட கலக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

தமிழக முதலமைச்சர் 05.08.2021 அன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெருமத்தூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மாத்திரைகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களாக, மக்களை வீடு தேடி சென்று மருத்துவச்சேவை செய்வதன் மூலம் தொற்றா நோய்களான இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதிகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைக்கப்படும்.

இந்த மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவச்சேவை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் இரத்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட 8,880 நபர்கள், இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 13,806 நபர்கள், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 5,240 நபர்கள் ஆக மொத்தம் 27,926 நபர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் இரத்த சர்க்கரை நோயாளிகள் 5,257 நபர்களுக்கும், இரத்த கொதிப்பு நோயாளிகள் 6,092 நபர்களுக்கும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2,425 ஆக மொத்தம் 13,774 நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நபர்களுக்கு மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பதிவு செய்யாத இரத்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் வீடு தேடி சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இது போன்ற அரசின் சிறப்பான சேவைகளை பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வழிவகை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!