Man arrested for having sex with a mentally challenged woman near Perambalur!
Jail
பெரம்பலூர் மாவட்டம், பரவாய் கிராமத்தில், சுமார் 26 வயதான பெண் ஒருவர் பிறந்ததில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தந்தை இறந்து விட்டார். தாய், சகோதரிகளுடன் வசித்து வருகிறார். பரவாய் சமத்துவபுரத்தை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ(49) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேற்று மதியம் 1 மணி அளவில் அவரது வீட்டில் ஆள்இல்லாத போது பால்ராஜ் தின்பண்டம் வாங்கி கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார். இரவு வீட்டிற்கு திருப்பிய போது அப்பெண்ணின் தாயார் நடத்தையில் சந்தேகமடைந்து விசாரித்ததில், பால்ராஜ் வந்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.