Man arrested for molesting woman on bus
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை பெரம்பலூர் போலீசார் சிறையில் அடைத்தனர்.
நேற்றிரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே வந்த போது பெண் பயணி பின்னால் இருக்கையில் இருந்த ஆண் பயணியை நோக்கி எச்சரித்தார். அதை பொருட்படுத்தாத அந்த நபர் மீண்டும் கையை வைத்து அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவசர எண் 100க்கு அழைத்து புகார் தெரிவித்தார். இதனால் பஸ்ஸில் சலசலப்பு ஏற்பட்டது. பேருந்து பெரம்பலூர் வந்தவுடன் அங்கு காத்திருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோதண்டராமன் (47) எலக்ட்ரிசியன் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மது போதையில் பேருந்தில் பயணிக்க தடைவிதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.