Manufacturers and sellers of firecrackers should act with due care; Perambalur Collector Advice!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலை மற்றும் பட்டாசு கடைகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில், போலீஸ் எஸ்.பி ஷியாமளாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது, அவசர கால வழியை (Emergency Exit) அடைக்கும் அளவிற்கு அங்கே அடுக்கி வைப்பதையோ சேமித்து வைப்பதையோ தவிர்க்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீ தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக் கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும் ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும்.

ஒரு சமயத்தில் ஒரு இடத்தில ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனத்தில் பட்டாசு பண்டல்களை இறக்குதல் / ஏற்றுதல் செய்வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகில் புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது என அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். கடையிலோ, கடைக்கு அருகிலோ மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு, மின்சார சாதனம் கொண்டு “சீலிங்” செய்வதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ குத்தகைக்கோ விடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட / அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள Label ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டும் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டும்.

பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனைக் கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறையின் வட்டாட்சியர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும் விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது,

முன்னதாக, அகரம் சீகூரில் வான வேடிக்கை வெடி தயாரிக்கும் ஆலையினையும், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பட்டாசு விற்பனைக் கடையினையும் கலெக்டர் கற்பகம், எஸ்.பி ஷ்யமளாதேவி ஆகியோர் உற்பத்தி ஆலைக்கான உரிமம், சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற வேண்டிய அனுமதி கடிதங்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்றும், ஆலை வருடந்தோறும் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், உரிய ஆவணங்களையும், வெடிபொருட்கள் உற்பத்தி செய்யும் இடம், சேமித்து வைக்கும் இடம் உள்ளிட்டவற்றையும், தீத்தடுப்பான்கள் அவசரகால வழிகளையும் பார்வையிட்டனர். இக்கூட்டத்தில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!