Married woman commits suicide
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமம் வெண்பாவூர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சத்தியராஜ் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் பவித்ரா( வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. பவித்ரா நாள் தோறும் பெரம்பலூர் குரும்பலூரில் உள்ள கல்லூரியில் படிக்க பேருந்தில் வந்த சென்ற போது பழக்கம் ஏற்பட்டதில் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்தின் பேரில் சுமார் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பதினோரம் வகுப்பு வரை படித்த சத்தியராஜ் தற்போது வேலையின்றி இருப்பதாக கூறப்பகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறும் இருந்து வந்துள்ளதாக ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பவித்ரா நேற்று வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் பவித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 மாதங்கள் என்பதால் ஆர்.டி.ஓ வழக்குப்திவு விசாரணை நடத்தி வருகிறார்.