Marxist party demands repair of houses for those staying in camps damaged by rains near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி காலணியில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. இந்நிலையில் நிவர் புயலைத் தொடர்ந்து சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் மேற்கூரை இடிந்து சேதமடைந்த காரணத்தால் அங்கு வசித்த மக்களை பாதுகாப்பாக அருகிலுள்ள அரசு பள்ளியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியுமின்றி தவித்தனர். அதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி புதுக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது. அதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டார். எனவே, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலைமையில் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், மாவட்டக்குழு ஆர்.முருகேசன் ஆகியோர் நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்தனர். அப்போது அந்த மக்கள் தெரிவித்ததாவது தங்களது வீடுகள் தற்போது பெய்த கனமழையின் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்து விட்டது. தங்கள் மீதும் குழந்தைகள் மீதும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் வேறு வழியின்றி தற்காலிகமாக அரசு பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளோம். நாங்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உடனடியாக எங்களால் எதுவும் செய்ய இயலாது. எனவே அரசு எங்களது வீடுகளை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சிபிஎம் வட்ட நிர்வாகிகள் செல்லதுரை, மாதர் சங்க நிர்வாகிகள் மகேஸ்வரி, மாரியாயி சிவகாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!