Marxist party protests in Perambalur demanding medical college reservation.
மருத்துவக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர்-ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை எஸ்.அகஸ்டின் ஆகியோர் ஆர்ப்பாட்ட கணடன உரையாற்றினர். நிர்வாகிகள் எம்.கருணாநிதி, ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி, ஆட்டோ சங்கம் சி.சண்முகம், எஸ்.கே.சரவணன், மல்லீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.