Mass participants camp in Perambalur district panchayat unions; Collector information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் “வெகுதிரள் பங்கேற்பாளர்கள் மாதம்” ஆக தெரிவு செய்யப்பட்டு 19.02.2021 அன்று பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய 4 வட்டாரங்கள் வாரியாக திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களின் மூலம் பயிற்சியாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இப்பங்கேற்பாளர்கள் முகாமில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் 10வது, 12வது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்து கொள்ளலாம் என்றும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) அலுவலகத்தில் நேரில் அல்லது 9444094324 என்ற அலைபேசி எண் மற்றும் 04328-225362 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!