May apply to contest local elections; Perambalur AIADMK District Secretary R.T. Ramachandran MLA
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுவினர் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அனுமதி கோரும் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இந்த விருப்ப மனுக்கள் வருகிற நவ. 15 மற்றும் 16 -ந் தேதிகளில் பெரம்பலூரில உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் பெறப்படுகிறது. மேற்கண்ட இரு நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய தொகை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்கள்
நகர சபை தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகர சபை வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.