May Day Celebration on behalf of CITU unions in Perambalur district || பெரம்பலூர் மாவட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா

பெரம்பலூர்.மே.1-

சாதி மதம் இனம் மொழி நாடு என வேற்றுமைகளை கடந்து தொழிலாளி என்ற சகோதரத்துவ உணர்வுடன் மே தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை கொடி ஏற்றி நிகழ்ச்சியிகளை தொடங்கி வைத்தார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி முன்னிலை வகித்தார். பின்னர் நான்கு ரோடு மின்வாரிய அலுவலகம், புதியபேருந்து நிலைய ஆட்டோ சங்கம், பழைய பேருந்து நிலையம் சாலையோர வியாபாரிகள் சங்கம் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் எ.கணேசன், பொது தொழிலாளர் சங்கம் பி.முத்துசாமி மின்ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின், இராஜகுமாரன், சாலையோர வியாபாரிகள் சஙகம் பி.ரெங்கராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல் 3 பிளஸ் 1 ஆட்டோ சங்கம் மற்றும் அனைத்து வகையான ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் குன்னம், அகரம்சிகூர், லெப்பைகுடிகாடு, எசனை, அரணாரை பெரம்பலூர் புதிய பழையபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மே தின உறுதிமொழி ஏற்றனர்.

ஆட்டோ சங்கம் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பிரகாஷ், மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், மாநிலக் குழு சி.சண்முகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்டோ சங்கம் சார்பில் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியில் உள்ள வித்யாஸ்ரம் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் மல்லீஸ்குமார், எ.தர்மராஜ் வி.துரைராஜ் பெரியசாமி கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!