English summary : MBA in studying college student hanged herself in Perambalur , police investigation
பெரம்பலூர் அருகே எம்.பி.ஏ., படிக்கும் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூர் : அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி மகன் வருண்(வயது -21), இவர் பெரம்பலூர் அருகே உள்ள பெரியார் குடில் பின்புறம் எழில் நகரில் உள்ள தனது சகோதரி சத்யா வீட்டில் தங்கி பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார்.
இன்று காலை நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வீட்டை விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவரது சகோதரி வீட்டின் எதிரே உள்ள வயல் பகுதியில் வேப்பமரம் ஒன்றில் வருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், வருணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வருணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு கல்லூரி படிப்பு நிறைவுற உள்ள நிலையில் மாணவர் வருண் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.