MCOP in Perambalur District
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர்( தெற்கு) கிராமத்தில், வரும் 18.10.2023 புதன்கிழமை அன்றும், பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊ◌ாட்சிக்கு உட்டபட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில், வரும் 31.10.2023 செவ்வாய் கிழமை கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடந்து வருகிறது.
எனவே, தேவையூர்(தெற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தேவையூர்(தெற்கு) கிராம நிர்வாக அலுவலகத்திலும், தம்பிரான்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், வருவாய்த்துறை அலுவலர்களிடம் முன்னதாகவே மனுக்களை அளித்து பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.