Measures to provide appropriate milk purchase price, incentives; The deputy registrar of milk resources confirmed in the peace talks!
கடந்த மாட்டுப் பொங்கல் அன்று பெரம்பலூரில், பால் உற்பத்தியாளர்கள் கேன்களுடன் அரசு அறிவித்துள்ள விலையை வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்கு, இன்று ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில், பால் வளத் துணை பதிவாளர் ஜெயபாலன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் கால்நடை மருத்துவர் விபி அன்பழகன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் செல்லத்துரை உள்பட பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதில், அரசு வழங்கும் உரிய பால் கொள்முதல் விலை, ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத் துணை பதிவாளர் ஜெயபாலன் தெரிவித்தார்.