Mechanic workshop near Perambalur Goods worth Rs. 50 thousand stolen!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மோகன் (34), இவர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்த போது, வாட்டர் சர்வீஸ் செய்யும் கம்பரசர் மோட்டார், கருவிகள், வாகன ஆயில் கேன்கள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ 50 ஆயிரம், இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.