Medical and Public Welfare Minister Ma Subramaniam to visit Perambalur tomorrow

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை மதியம் 2:30 மணி அளவில் மேலமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று மருந்துகளை வழங்குகிறார், பின்னர்,


மதியம் 3 மணி அளவில் பேரளி கிராமத்தில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியின் மூலம் பொது மக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்ர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று மருந்துகளை வழங்குகிறார்.

பின்னர், மாலை 4:15 மணியளவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், மாலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.


இதில் பெரம்பலூர் கலெக்டர், பெரம்பலூர் எம்.எல்.ஏ உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!