medical camp and rehabilitation center for the disabled at veppur in perambalur dt
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று (21.11.2017) முதல் 25.11.2017 வரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 14 துறைகள் ஒருங்கிணைப்புடன் சிறப்பு முகாமகள் நடத்தப்படுகின்றது.
பெங்களுரில் உள்ள அலிம்கோ (ALIMCO – Artificial Limps Manufacturing Corporation Limited) என்ற மத்திய அரசு நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை செய்து வருகின்றது. பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா முயற்சியால் மத்திய அரசின் நிறுவனமான அலிம்கோ நிறுவனத்தின் நிபுணர்களும் இம்முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை செய்துகொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர;.
அதனடிப்படையில் வேப்புபூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மற்றும் மறுவாழ்வு முகாமை நாடாளுமன்ற உறுப்பினர்ர் மா.சந்திரகாசி, குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இச்சிறப்பு முகாம்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிபுணர்ர், செவித்திறன் கண்டறியும் நிபுணர் மற்றும் மருத்துவர்ர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்து மாற்றுத் திறனாளிகளை பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்தும், அவற்றின் அளவுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்தனர். கை,கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்கள் பொருத்துவதற்காக அவர்களுக்கு தேவையான அளவில் செயற்கை உபகரணங்களை தயாரிப்பதற்காக சரியான அளவீடுகளை எடுக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
18 வகையான உபகரணங்கள் வேண்டி 102 நபர்ர்களும், கடன் உதவித்தொகை வேண்டி 78 நபர்ர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு வேண்டி 11 நபர்களும், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர 20 நபர்களும், ஆதார் அட்டை வேண்டி 14 நபர்களும், முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வேண்டி 4 நபர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 56 நபர்களும் என மொத்தம் 285 நபர்கள் கலந்துகொண்டு, விண்ணப்பங்களை அளித்தனர்.
அனைவரின் விண்ணப்பங்களும் உரிய பரிசீலினைக்குப் பின்னர; தகுதியுடைய நபர;களுக்குத்தேவையான அனைத்து உதவிகளையும் விரைவில் செய்து தர வேண்டும் என்று நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலரையும், சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியரையும் வலியுறுத்தினார்கள்.
இம்முகாமில் மனநலம் தொடர்ர்பான பிரச்சனைகளுக்கு இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜன், கை,கால் தொடர்பான பிரச்சனைகளுக்கு எலும்பியல் மருத்துவர் விவேக், கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு மரு.ஆனந்தமூர்த்தி, காது,மூக்கு தொடர்பான பிரச்சனைகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தேவேந்திரன், குழந்தைகள் நல தொடர்பான பிரச்சனைகளுக்கு குழந்தைகள் நல அலுவலர் கமலக்கன்னன் ஆகியோர்களால் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
மேலும், உபகரணங்கள் தேவைப்படும் நபர்களுக்கு உரிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை 22.11.2017 வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23.11.2017 அன்று பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25.11.2017 அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் மறுவாழ்வு முகாம்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், குன்னம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மனோண்மணி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.