Medical College in Perambalur, Special Economic Zone to be brought in: Interview with Winning DMK MLA Prabhakaran!
பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் என்னை வேட்பாளராக நிறுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் ,மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருக்கும், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதியின்படி பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என தெரிவித்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி ; வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம்.
பதிவான ஓட்டுக்கள்- 2,39,555, திமுக – ம. பிரபாகரன் – 1,21,882, அதிமுக – இரா.தமிழ்செல்வன் – 90,846, நாம் தமிழர் – மு.மகேஸ்வரி – 18,632, தேமுதிக – கி.ராஜேந்திரன் – 2,929, பி.எஸ்.பி. க.ராஜேந்திரன் 520, தேசியவாத காங்கிரஸ் அ.குணசேகரன் 407, ஐ.ஜே.கே – மா.சசிகலா – 1,076, புதிய தமிழகம் ராதிகா 1002, எஸ்.சதீஸ் -சுயேச்சை 379, நோட்டா – 1,882. என தபால் வாக்குகள் உள்பட எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மா பிரபாகரன் 31 ஆயிரத்து 36 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.பிரபாகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா வழங்கிய போது எடுத்தப்படம். அருகில் மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.