Mentally challenged youth death: Perambalur police investigate
பெரம்பலூர் அருகே உள்ள தனியார் காப்பகத்தில், பாராமரிக்கப்பட்டு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நோயால் உயிரிழந்தார், இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த இளைஞர் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 21 வயது மதிக்கதக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நிர்வாணகோலத்தில் திரிந்து வந்தார். பொதுமக்கள் தகவலின் பேரில், வெங்கனூர் போலீசார், அவரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை உதவியுடன் தனியார் காப்பகத்தில் சேர்த்தனர்.
அங்கு அந்த இளைஞர் பாராமரிக்கப்பட்டு நிலையில், கடந்த தீபாவளிக்கு பின்பு உடல் நிலை பாதிககப்பட்டதில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை முடிந்து காப்பகத்திற்கு வந்த அவர் மீண்டும் உடல் நலம் குன்றியதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் மரணமடைந்தார்.
இறந்தவர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.