MGNREGS and the state’s solid waste Strategists programs _ under 87 village panchayats in the Perambalur district at an estimated cost of Rs .534.348 lakh solid waste management tasks: Collector

collector-nandhakumar

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் மாநில அரசின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களின்கீழ் 87 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் 534.348 லட்சம் மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 20 கிராம ஊராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக 67 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து தனலெட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் இரண்டாம் கட்ட திட்ட செயல்பாட்டில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம ஊராட்சிச் செயலர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான திட்டச் செயலாக்கப் பயிற்சி இன்று நடைபெற்றது.

இப்பயிற்சியினை மாவட்ட ஊரக வளர;ச்சி முகமையின் திட்ட இயக்குநர; திரு.சிவராமன் துவக்கி வைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விரிவாகப்பேசினார்.

பின்னர், மதிய நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :

ஊராட்சித் தலைவர்கள் தங்களது கிராம ஊராட்சிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களது ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் சேகரம் ஆகும் குப்பைகளை வீட்டிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை வாங்க வருகைதரும் தூய்மைக் காவலர்களிடம் வழங்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தினந்தோறும் காலையில் இப்பணிக்கென நேரம் ஒதுக்கி பணி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகள் சேராமலும், கழிவு நீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம் கொசுக்கள் வருவதை தடுக்க முடியும்.

இரண்டாம் கட்ட திட்டத்தில் 548 தூய்மைக் காவலர்கள் மற்றும் இவர்களை கண்காணிக்க 143 பணித்தளப்பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஊராட்சிச் செயலர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் முழுமையாக இத்திட்டத்தில் பங்குபெற்று இத்திட்டம் வெற்றியடைய கேட்டுக்கொள்கிறேன்.

இத்திட்டதிற்கென 300 வீடுகளுக்கு தலா ஒரு குப்பை வண்டி வீதம் 274 குப்பை வண்டிகள் ரூ.54.80 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். ஊராட்சிக்கு தலா ஒரு குப்பை கிடங்கு அமைக்க தலா ஒரு லட்சம் வீதம் 67.00 லட்சம் வழங்கப்டும், ஊராட்சிகளுக்கு தலா 4 எண்ணிக்கையில் இரும்பு குப்பைத் தொட்டிகள் ஊராட்சிக்கு ஒரு லட்சம் வீதம் 67.00 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

மேலும், இதன்மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்கி அந்த உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம், பிளாஸ்டிக் மற்றும் இதர மக்காத குப்பைகளை மறுசுழற்சிச் செய்து ஊராட்சிகளுக்கு இதர வருமானங்களை பெருக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

துறை சார்ந்த அரசு அலுவலர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம ஊராட்சிச் செயலர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வறுமையை ஒழிப்பதற்காக நட்சத்திர ஹோட்டலில் மீட்டிங் போட்டு மக்கள் பணத்தை விரயம் செய்வது மக்களை சிந்திக்க வைத்துள்ளது. மேலும், முன்பாக பெரம்பலூர் ஆட்சியராக பணியில் இருந்த தரேஸ் அஹமது மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் மிச்சம் செய்து பல்வேறு திட்டங்களை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!