MGR Centenary Festival: 10 thousand square footage of students drawn MGR.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரம்பலூரில் 10,000 சதுர அடி பரப்பளவில் எம்.ஜி.ஆரின் படம் வரையப்பட்டது

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஆக. 5 அன்று பெரம்பலூh; நகரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவினை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளும், ஏராளமான நிகழ்ச்சிகள் வரும் ஆக.4 – வரை நடத்தப்படவுள்ளது.

இன்று பெரம்பலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்திரமனை அரசினர் உயர;நிலைப்பள்ளிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஓவிய ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர்களது மேற்பார்வையில் 100 அடி நீளம் மற்றும் 100 அடி அகலத்தில் எம்.ஜி.ஆர். படம் 10,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக வரையப்பட்டது.

திருவுருவப்படத்தை வரைந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!