MGR. Century Ceremony: Free Medical Camp for Alternative Disabilities

பெரம்பலூர் : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமினை வேப்பூர் ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பொ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 6-18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் விவேக், மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் தேவேந்திரன், கண் பரிசோதகர் ராஜலிங்கம் உள்ளிட்ட மருத்துவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதித்தனர்.

இதில் கை கால் இயக்க குறைபாடு உடைய 23 பேர், மனவளர்ச்சி குன்றியோர் 152 பேர்களும், செவி மற்றும் பேச்சு குறைபாடுடையோர் 13 பேர் குறை பார்வை மற்றும் கண் பார்வையற்றோர் 12 பேர் என மொத்தம் 200 பேர், கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இம்முகாமில் உதவி உபகரணங்கள் பெற தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்ட 18 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, 1 மாணவருக்கு சக்கர நாற்காலி, 3 நபர்களுக்கு உதவி உபகரணங்கள், 6 நபர்களுக்கு கண் கண்ணாடி, 4 நபர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இம்முகாமில், மாவட்டக் கல்வி அலுவலர் வெ.பிருதிவிராஜன், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ராமகிருஷ்ணன் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.ராஜா, கூடுதல் தொடக்க அலுவலர், சு.இலதா மற்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், நான்கு ஒன்றிய சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!