MGR Century Festival: Marathon race in Perambalur
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு, பெரம்பலூரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமசந்திரன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மா.சந்திரகாசி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த தொடர் ஓட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக முகப்பில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா, சங்குப்பேட்டை, அரசு தலைமை மருத்துவமணை அடைந்து திரும்பவும் பழைய பேருந்து நிலையம் வழியாக ஆத்தூர் சாலைக்கு சென்று வட்டாட்சியர; அலுவலகம், காமராஜர் வளைவு வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கை அடைந்தது.
இந்த மாரத்தான் ஓட்டப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் 9 கி.மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டங்களில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஒரு டி – சர்ட் வழங்கப்பட்டது.
இந்த மாராத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பெரம்பலூரை சேர்ந்த விஜய் என்பவரும், பெண்கள் பிரிவில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள மாணவி கிருத்திகாவும் முதலிடத்தை பிடித்தனர். இவர்களுக்கு ஆக. 05. அன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சரால் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.
மாராத்தான் ஓட்டத்தை குறித்த நேரத்தில் முடித்த 10 முதல் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும், மேலும் மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்குப் பெற்றேருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.