MGR is named after the Perambalur District Sports Ground : GO RELEASED

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.

மாவட்ட விளையாட்டு வளாகம் சுமார் 10 ஏக்கர் நிலபரப்புடையதாக உள்ளது. 400மீ தடகள ஓடுபாதை கால்பந்து மைதானம், கையுந்துபந்து, கைப்பந்து மைதானம், மின்னொளியுடன் கூடிய டென்னிஸ் மைதானம், கோ-கோ மைதானம், இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம்,கூடைப்பந்து மைதானம், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், பார்வையாளர்கள் அமரகூடிய இருபுறமும் உள்ள கேலரி, விழா மேடை, பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம், மகளிh; விளையாட்டு விடுதி ஆகிய வசதிகள் உள்ளது.

பெரம்பலூரில் 05.08.2017 அன்று நடைபெற்ற பாரதரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விiளாயட்டு வளாகத்திற்கு “பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம்” என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு பெயர் மாற்றப்பட்டு அரசாணை (அரசாணை நிலை எண்:45 நாள்:12.10.2017) வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மாவட்ட விளையாட்டு வளாகம் “பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம்” என்று அழைக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!