MGR who helped the opposition; RT Ramachandran MLA Talk!
பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில், பெரம்பலூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.பி. மருதைராஜா தலைமையில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சரின் 103 வது பிறந்த நாள் பொதுக்கூட்டமும், வாக்களர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் எம்.சந்திரசேகர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.பிச்சைப்பிள்ளை, ஜானகிசின்னசாமி, பொருளாளர் என்.வெங்கடசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சீத்தாபதி, ரூபினிஜெகதீஸ், கூட்டுறவு பால்பண்ணைத் தலைவர் எஸ்.மாமுண்டிதுரை, கிளைக்கழக செயலாளர்கள் சோ.துரை, த.ரவி, மா.கந்தசாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளரும், முன்னாள் துணைசபாநாயகருமான வரகூர் அ.அருணாசலம் , மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமசந்திரன் எம்.எல்.ஏ தலைமை கழக பேச்சாளர் முத்துமணிவேல், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட மகளிரணி செயலாளர் கி.ராஜேஸ்வரி, பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சின் சுருக்கம் :
தமிழகத்தில் அப்போதைய காலகட்டத்தில் அதிக அளவு சம்பளம் பெறும் நடிகர்கிளல் முதன்மையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே இருக்காலாம். எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய பெருந்தன்மை உள்ளவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று… அன்று அண்ணா ஆட்சி கட்டிலில் அமர அன்று அண்ணாவின் கோரிக்கை ஏற்று இதயக்கனியாக தமிழகம் முழுவதும் வலம் வந்து அன்று காங்கிரசை தோற்கடித்து வெற்றி பெற செய்தார். கடனில் தத்தளித்த கருணாநிதி குடும்பத்தார் கடனில் மீள முரசொலி மாறனின் கோரிக்கையை ஏற்று எங்கள் தங்கம் படத்தை சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்ததோடு, புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவையும், சம்பளம் பெறக்கூடாது என அன்புகட்டளையிட்டவர் எம்.ஜி.ஆர். அந்த படத்தின் வசூலால் மீண்ட கருணாநிதி குடும்பம் இன்று அவரை காப்பாற்றிய எம்.ஜி.ஆரின் கட்சியையே இன்று அழிக்க பார்க்கிறது. அது நடக்காது. அண்ணா திமுக இன்னும் நூறு நூறாண்டுகள் வாழும் என பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொறுப்பாளர் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் அருணாபாண்டியன் (மேலப்புலியூர்), சத்யா பன்னீர்செல்வம் (எசனை), கலையரசிரமேஷ் (கோனேரிப்பாளையம்), போஜன் ராஜேந்திரன்(சிறுவாச்சூர்), சாவித்திரி பெருமாள் (லாடபுரம்), ராமர் (அயிலூர்), ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திமுத்துசாமி, பிரியாமாமுண்டிதுரை உள்பட தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டர். கிளைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.