MGR’s 106th birthday celebrations near Perambalur!
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்புலியூரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.செல்வக்குமார் தலைமையில் நடந்தது. முன்னாள் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் என்.கே.கர்ணன், டி.என். சிவப்பிரகாசம், கே.ரவிச்சந்திரன், கே.எஸ்.செல்வமணி, பெரம்பலூர் நகர செயலாளர் ஆர். ராஜபூபதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், தலைமை கழக பேச்சாளர்கள் முத்துக்கிருஷ்ணன், முகவை கண்ணன், முன்னாள் எம்.பிக்கள் ஆர்.பி.மருதைராஜா, மா. சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன், உள்ளிட் பலர் சிறப்பு ஆற்றினர். இதில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஜானகி சின்னசாமி, கவுன்சிலர் அருணாபாண்டியன் தொண்டர்கள், மகளிரணியினர் உள்ளிட்ட பொதுமக்கள் திராளக கலந்து கொண்டனர். மேலப்புலியூர் கிளை செயலாளர் பி.ஆறுமகம் நன்றி கூறினார்.