Milk producers block the road with milk cans in Perambalur to demand the purchase price of milk announced by the government!

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் லிட்டர் 1 க்கு 33 ரூபாய்க்கு பால் ஊற்றி வருகின்றனர், பாண்டியன் என்பவர் செயலாளராக உள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பால் கொள் முதல் விலை உயர்வு ரூ.3 யை இது நாள் வரை உயர்த்தாமலும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்த பால் கொள்முதல் நிலையையும் இதுவரை உயர்த்தாமல் உள்ளனர்.

இதனால் தமிழக அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை 1 லிட்டருக்கு 38 ரூபாயை உயர்த்தி வழங்க கோரி, பால் உற்பத்தியாளர்கள் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆவின் ஏரியா மேனேஜர் டாக்டர் அன்பழகன் மற்றும் ஈ.ஓ. இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!